Tamil News Channel

வாட்ஸ்அப் பயன்படுத்துறீங்களா? புது அம்சத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

25-67cbc37c1672a

வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப்

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் வைத்திருக்கும் மக்கள் பெரும்பாலும் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தாலும் முகம் பார்த்து பேசும் அளவிற்கு வாட்ஸ் அப் உதவியாக இருக்கின்றது.

அதிலும் வாட்ஸ் அப் செயலியில் பல பதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் கொடுத்து பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.

இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகில் AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், வாட்ஸ் அப்பில் AI மறுவடிவமைப்பு மெட்டா நிறுவனம் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் மெட்டா AI இன்டர்ஃபேஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பில் வரவுள்ளது.

மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் மெட்டா AI 2025 இல் கணிசமாக மேம்படுத்தப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பில் மெட்டா AI மறுவடிவமைப்பு

வாட்ஸ்அப் அம்சம் கண்காணிப்பு தளமான WABetaInfo இன் படி, வாட்ஸ்அப் பயனர்களுக்கான மெட்டா AI அனுபவத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 2.25.5.22 அப்டேட்டிற்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவில் சாட்போட்டின் புதிய இன்டர்ஃபேஸ் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது மேம்பாட்டு நிலையில் இருப்பதால், பீட்டா சோதனையாளர்கள் இதை முயற்சிக்க முடியாது.

வாட்ஸ்அப்பின் சாட்ஸ் திரையின் கீழ் வலது மூலையில் உள்ள மெட்டா AI ஐகானை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் மெட்டா AI ஐ புதிய இன்டர்ஃபேஸில் திறந்து வாய்ஸ் மோடை செயல்படுத்தலாம்.

புதிய மெட்டா AI இன்டர்ஃபேஸ் தற்போதுள்ள சாட் விண்டோவைப் போல இல்லாமல், திரையின் பெரும்பகுதி சாட்போட்டின் லோகோ மற்றும் “லிசனிங்” என்ற வார்த்தையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோஃபோன் பொத்தானைத் தட்டுவதன் மூலம் அல்லது டெக்ஸ்ட் புலத்தில் எதையாவது டைப் செய்வதன் மூலம் டெக்ஸ்ட் மோடிற்கு மாறலாம்.

பயனர்கள் இந்த இன்டர்ஃபேஸில் இருக்கும் வரை மட்டுமே மெட்டா AI கேட்கும். விண்டோவை விட்டு வெளியேறினால், செஷன் முடிவடையும்.

பயனர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ப்ராம்ப்ட் பரிந்துரைகளையும் புதிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.

வாட்ஸ்அப் இந்த மெட்டா AI மறுவடிவமைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts