தமிழ், கன்னடம் உட்பட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை திவ்யா ஸ்பந்தனா. தற்போது இவர் முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரை நோக்கிய வண்ணம் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் வதந்திகளை சமூக ஆர்வலர்கள் பரப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு இவர் உயிரிழந்துவிட்டார் என பொய்யான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், தற்பொழுது 41 வயதாகும் திவ்யா திருமணம் செய்துகொண்டார் என்று தற்போது மீண்டும் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், ”எனக்கு பலமுறை மீடியா மக்கள் திருமணம் செய்து விட்டனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடைபெறும் நிலையில் கண்டிப்பாக நானே சொல்வேன் அதுவரை இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற வதந்திளை பரப்புவதை நிறுத்துங்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார்.








