இந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், சிட்னியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஈழத் தமிழை பாராட்டி பேசி உள்ளமை வரவேற்பை பெற்றுள்ளது. ஈழத் தமிழர்களின் “தூய்மையானது” என அவர் விவரித்தார்.
அந்த நிகழ்வில் பேசிய த்ரிஷா, ஈழத் தமிழை கேட்பதை தான் மிகவும் விரும்புவதாகவும், அது பேசப்படும் விதத்தை பெரிதும் ரசிப்பதாகவும் கூறினார்.
“எனக்கு ஈழத் தமிழ் ரொம்ப பிடிக்கும். அதோட தூய்மையான தன்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க கூட அப்படி பேசுறதில்ல” என்று அவர் கூறியதும் அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தமை வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது .








