சவுதி அரேபியாவால் இலங்கை இளைஞரான ஆனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குறித்த குற்றச்சாட்டு முற்றிலும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மொஹமட் நபிக்கு அவமதிப்பு செய்வதாகக் கருதப்படும் கருத்து ஒன்றை தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவராசா ஆனோஜனுக்கு சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

வெறுமனே தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக எவரும் சிறையில் அடைக்கப்படக்கூடாது, மரண தண்டனை போன்ற தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா ஆனோஜன் தொடர்பில் விசாரிப்பதற்காக சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவர் இன்று (08) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு செல்லவுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மற்றொரு கைதியால் ஆனோஜன் தாக்கப்பட்டு காயமடைந்தமை தொடர்பில் விசாரிக்க தூதுவர் தம்மாமில் உள்ள சிறைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சிவராசா ஆனோஜனுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு இன்றும் அது தொடர்பில் விசாரிக்கவுள்ளது.

நேற்று (07) அந்நாட்டு சட்டத்தரணிகளிடம் இருந்து அது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஆனோஜனின் மேல்முறையீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here