
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது.
அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைவராகவும் இருபதுக்கு 20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர் இரண்டுக்கும் அவுஸ்திரேலியா அணியின் மிட்சேல் மார்ஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.