இலங்கை தனது ஜனாதிபதித் தேர்தலை நெருங்கி வரும் நிலையில், மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை தூதுவர் லெவன் டகாரியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“உங்கள் வீட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். நாங்கள் உங்களுக்கு பாடம் நடத்தவில்லை. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உங்கள் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிப்போம், உங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடனும் நாங்கள் பணியாற்றத் தயாராக இருக்கிறோம், ”என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை அமைதியான தேர்தல் நடைமுறைக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அடுத்த அரசாங்கம் நடுநிலைமை கொள்கையை தொடரும் என்றும் ரஷ்யாவுடன் நட்புறவை பேணும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan, இலங்கையின் சமச்சீர் மற்றும் நடுநிலையான வெளியுறவுக் கொள்கைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here