சனி பகவான் மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்த ராசியில் நுழைந்ததால், ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் சில ராசியினருக்கு ஆரம்பித்திருக்கும்.

அதுவும் சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருவதால் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட ராசிகள் அவர்களது வாழ்வில் பல வேதனைகளை சந்தித்திருப்பார்கள்.

ஆனால், இந்த வேதனைகள் நவம்பர் 15இற்குப் பின்னர் முடிவுக்கு வருகிறது.

அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி

கடகம் மற்றும் விருச்சிக ராசியினர் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்திருப்பார்கள். இதனால் அவர்களது முக்கிய வேலைகள் தடைபட்டிருக்கும்.

நவம்பர் மாதம் சனி வக்ர நிவர்த்தி அடைவதனால் இவர்களின் வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழில் கிடைக்கும்.

ஏழரை சனி

மீனம், கும்பம், மகரம் ஆகிய ராசியினருக்கு சனி வக்ர நிலையில் இருப்பதால் மன அமைதி இல்லாமல் இருந்திருப்பார்கள்.

நவம்பர் மாதத்துக்குப் பின்னர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல இலாபத்தைப் பெறுவார்கள். மொத்த வாழ்க்கையும் சிறப்பாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here