வாக்குப்பதிவு ஆரம்பமாகி 5 மணி நேரம் கடந்தும் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
கடந்த 5 மணித்தியாலங்களில் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை.
இந்த ஆண்டு தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் பணிகளுக்காக இதுவரை 63,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







