இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.
இப் படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் செல்லைய்யா.
கிராமப் பின்னணியில் உருவாகும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார்.








