களுத்துறை தெற்கில் இன்று (28) பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொலிஸ் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப். யு. வூட்லர், இதனை தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர் 38 வயதுடைய ஆண் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலதிபரை நோக்கி, காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியமை ” விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஏ.எஸ்.பி. வூட்லர் மேலும் தெரிவித்தார்.








