பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் நேற்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன.

அங்கிருந்து கோபவனியானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலைய வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.ஏஸ் வீதியுடாக வந்து ஆலயத்தினை சென்றடைந்தது.

ஆலய பிரதம குரு ஸ்ரீகந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ம.ரஜீவன், ப.இளங்குமரன், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சமயத் தலைவர்கள், வியபார ஸ்தாபன உரிமையாளர்கள், சமயப் பெரியோர்கள், மாணவர்கள் பலரும்  கலந்துகொண்டனர்.

[ரட்னசிங்கம் – முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here