வெள்ளப்பெருக்கு காரணமாக க.பொ.த சாதாரண தர (O/L) அழகியல் செய்முறைப் பரீட்சைகளுக்கு சமூகமளிக்க முடியாத சபரகமுவ மாகாண மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெள்ள நிலைமை சீரடைந்த பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மையங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








