இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22/04/2025) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதே நேரத்தில், மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here