தீபாவளி திருநாள் அன்று அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரும் விஷேசமாகும்.

மற்ற பண்டிகைகளுக்கு கிடைக்காத முக்கியம் தமிழர்கள் மத்தியில் தீபாவளி பண்டிகைக்கு கொடுக்கப்படுகின்றது. இந்த நாளில் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற விஷேச நாட்களில் நல்ல விடயங்கள் செய்ய வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். ஏனெனின் நாம் சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நேர்மறை மற்றும் செல்வத்தை வீட்டில் நிலைத்திருக்க செய்யலாம்.

அதுவும் குறிப்பாக தீபாவளி என்பது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியைகொண்டாடும் பண்டிகையாகும் உள்ளது என்பதால் இந்த நாளில் முயற்சிப்பது நன்மையளிக்கும்.

அந்த வகையில் தீபாவளி அன்று சமையலறையில் பயன்படுத்தும் சில பொருட்கள் வீட்டிற்குள் மகிழ்ச்சி, செல்வம் கொண்டு வரும். அப்படியான மசாலாக்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தீபாவளிக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா?

1. இலவங்கப்பட்டை பெரும்பாலும் செழிப்பு உண்டுபண்ணும் பொருட்கள் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இனிமையான நறுமணத்தை கொண்ட இந்த பொருட்களை தீபாவளி நாளில் பயன்படுத்துவதன் மூலம் நேர்மறையான ஆற்றல்களை ஈ்க்கலாம். அத்துடன் வீட்டின் மூலைகளில் இலவங்கப்பட்டை பொடியை தூவினால் அதிர்ஷ்டம் வரும்.

2. ஏலக்காய் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. நிதி ஆதாயங்கள் ஏலக்காயுடன் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் நறுமணத்திற்கு தனித்தவமான பலன்கள் உள்ளன. தீபாவளி இனிப்புகளில் ஏலக்காயைப் பயன்படுத்தினால் செல்வம் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஏலக்காய் காய்களை பண அலமாரியில் அல்லது பணப்பையில் வைத்தால் பணவரவு அதிகமாகும்.

3. கிராம்பு தனித்துவமான மணம் கொண்டது. நேர்மறையான ஆற்றல்களை அதிகமாக கவரும். பிரியாணி அல்லது அசைவ உணவுகளில் கிராம்பு கண்டிப்பாக இருக்கும். அதே சமயம் உங்களின் பணப்பையில் கிராம்பு வைத்து கொண்டால் பணவரவு அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here