2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று வழங்கப்படும் என கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற Trial-at-Bar அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், கடமையை அலட்சிய போக்கில் கையாண்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (12) நீதிபதிகளான பிரியந்த லியனகே,விராஜ் வீரசூரிய, திலகரட்ன பண்டார ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சகல தரப்பினரின் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புக்களும் இன்று முன்வைக்கப்பட்டன.

இதேவேளை, இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கும் இன்று விசாரிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா சமர்ப்பிப்புக்களை முன்வைத்தார். பெர்னாண்டோ தரப்பில் சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆஜரானார். சட்டத்தரணியின் மேலதிக சமர்பிப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை (15) தொடரும் என நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here