கிராண்ட்பாஸ், மகாவத்தை ரயில் பாதை பகுதியில் கைத்துப்பாக்கி, 9 மி.மீ ரக தோட்டாக்கள் 10 நிரப்பப்பட்ட தோட்டா கூடு மற்றும் 50 கிராம் 300 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








