நாட்டின் துறவிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி இதனை இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த விவகார அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோர் அடங்கும் வகையில் அந்தக் குழு நியமிக்கப்படும் என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் இது குறித்து ஆய்வு செய்து திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றும், அதில் துறவிகளை பாதிக்கும் பகுதிகள் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

அவ்வாறு இன்றி சட்டங்கள் இருக்கும்போது தனிப்பட்ட நபர்களுக்காக உத்தரவுகளை வழங்க தான் தயாராக இல்லை என்றும், சட்டம் தற்போதைய காலத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால் முறையாக சட்டத்தை உருவாக்குவதே நோக்கம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் சீவரத்தை அகற்றி சாதாரண உடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை, இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

அத்துடன் தனது அழைப்பின் பேரில் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டமைக்காக மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி தனது மரியாதையை செலுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here