லக்விஜய மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததன் காரணமாக இன்று (20) நாடு முழுவதும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணையம் நேற்று (19) தெரிவித்தது.

இதற்கமைய இன்றும் பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நாட்டின் அனைத்து பகுதிகளும் 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும் வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவை நிலையங்களை அண்டிய பகுதிகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது செயலிழந்துள்ள நிலையில், மின் விநியோகத்தை நிர்வகிக்கும் நோக்கில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்ய தேசிய கட்டமைப்பு கட்டுப்பாட்டாளர் நிறுவனம் நேற்று தீர்மானித்தது.

அதன்படி நேற்றைய தினமும் நாடு முழுவதும் மின்வெட்டு இடம்பெற்றதுடன், இன்றும் நாளையும் (21) ஆகிய இரு தினங்களிலும் இவ்வாறு மின்வெட்டு மேற்கொள்ள வேண்டி வரும் என குறித்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here