இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிரிலிய சவிய அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி CT ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்குவதாக கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து ரூ. 10 மில்லியன் பணத்தை பெற்று, குறித்த இயந்திரத்தை வழங்காமல் அரசாங்க பணத்தை குற்றவியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதன் மூலம் ஊழல் குற்றம் மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








