இரண்டு முறை சுவாசக் கோளாறு ஏற்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான போப் பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் உள்ளார்.
இருப்பினும், வணக்கத்திற்குரியவருக்கு செயற்கை சுவாசம் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, பெப்ரவரி 14 ஆம் திகதி போப்பை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போப்பின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் தனது கடுமையான நோயிலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்றும் கூறப்படுகின்றது.







