மிரிசா சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 36 வயதான மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை அடையாளம் காணும் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








