பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை விரைந்து முடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்தக் காலம் முடிவடைந்த போதிலும், ஒரு வேட்பாளர் குழு வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது தயாராகி வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here