ஹபரணை – கந்தளாய் பிரதான வீதியில், யானை ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

10 முதல் 15 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, லொறியின் சாரதி தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்உதுவ  பொலிஸார் மற்றும் கவுடுல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here