தெய்வீகம் நிறைந்த கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டு ஏன் செல்லக்கூடாது என்று பலருக்கும் தெரியாத ஒன்று.
கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். இதில் உடல் சுத்தம் மட்டுமின்றி மன சுத்தமும் அவசியமாகும்.
பொதுவாக நாம் சாப்பிடும் உணவிற்கும் நமது மனதிற்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது.
காரமான உணவை சாப்பிட்டால் அதிகமான கோபம் வரும் என்பார்கள். பொங்கல் மற்றும் தயிர் சாதம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள்.
மனதளவில் நாம் மந்த நிலையில் இருந்தால், கோயிலுக்குள் நிலவும் சூட்சம சக்திகள் மற்றும் தெய்வீக சக்திகளை உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்காமல் போகலாம்.
ஏனெனில், அசைவ உணவுகள் சூட்சம சக்தியை உணர்வதற்கான ஆற்றலைக் குறைக்க வல்லது. இதனால் நமது மனதை ஒருநிலைப்படுத்த முடியாது.
கோயிலுக்கு மட்டுமின்றி, வீட்டிலும் அசைவம் சாப்பிட்டு விட்டு பூஜை அறைக்குச் செல்லவோ விளக்கேற்றவோ கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.
சைவ உணவுகளை சாப்பிட்டு கோயிலுக்குச் செல்பவர்களின் மனம் மற்றும் உடல், கோயிலில் சுத்தமாக இருக்கும் பிராண சக்தியை அதிகமாக கிரகித்துக் கொள்கிறது.
