முன்மொழியப்பட்ட அனுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (23) பார்வையிட்டார், வரலாற்று நகரத்தின் தொல்பொருள் மற்றும் மத முக்கியத்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது வலியுறுத்தினார்.

7.7 பில்லியன் ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு, இந்திய அரசாங்கத்திடமிருந்து நிதி பெறப்பட உள்ளது. இது அணுகல் வீதிகள், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விஜயத்தின் போது, ஜனாதிபதி மூன்று வரலாற்று குளங்களுக்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி பணிகள், மேற்கு மடாலய வளாகத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ருவன்வெலிசாயாவிற்கு அருகிலுள்ள முன்மொழியப்பட்ட வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

புனித பகுதியின் பாரம்பரியம் மற்றும் மத பெருமைகளை பாதுகாக்கும் அதே வேளையில் திட்டத்தை விரைவுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து செயற்படுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும் அதிகாரிகளுக்கு திஸாநாயக்க அறிவுறுத்தினார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here