வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,  மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியவாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியசந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பகா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்தவெப்பநிலை காணப்படும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல்பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில்தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடல்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவுகொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here