அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதனூடாக 16 இலட்சம் பேர் நன்மைகளை பெற்றனர்.

எனினும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் அதன் நான்காவது பிரிவை சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

அதேபோல இதன் மூன்றாவது பிரிவை சேர்ந்த 4,25,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள குடும்பங்களில் ஏதேனும் குடும்பங்கள் வறிய நிலைக்கு தள்ளப்பட்டால் அவர்கள் மீண்டும் அஸ்வெசும கொடுப்பனவை பெற்று கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here