ஹட்டன், டிக்கோயாவில் முதிய தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், மீண்டும் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்திருப்பதாவது,

சந்தேக நபர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (27) கைது செய்யப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

எனினும், சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தபோது அவர் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறை, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகளையும் மறுத்துள்ளது.

ஹட்டன்-டிக்கோயா நகரப் பகுதியில் கணவன்-மனைவியைக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளுடன் தப்பிச் சென்றதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகரில் உள்ள ஒரு கடைக்குள் வசித்து வந்த தம்பதியினர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here