பாடசாலை மாணவர்களிடையே பருமன், உடல் பருமன் அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பாடசாலை சிற்றுண்டி சாலையில் ஆரோக்கியமற்ற உணவுக்கு,(ஜங் புட்) விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை வித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போஷாக்காக்கான உணவு பிரிவு நிபுணர், வைத்தியர் மோனிகா விஜேரத்ன இதனை அறிவித்துள்ளார்.
இதற்கமைய அதிக சீனி, அதிக கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள். அதாவது ஹொட் டொக், பேர்கர், பீட்சா, பிஸ்கட், கேக், கார்பனேற்றப்பட்ட பானங்கள், எக்ஸ்ட்ரூட் ஸ்னக்ஸ், பக்கட் பானங்கள் போன்றவை இனி பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் விற்பனை செய்ய முடியாது.
இதேநேரம் பாடசாலை சிற்றுண்டி சாலைகளை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க ஒரு வழிகாட்டி கையேடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.







