எரிபொருளுக்கு மானியம் வழங்குவதாக அரசாங்கம் கூறுவதை நிரூபிக்க, எரிபொருள் விலை நிர்ணயத்தின் முழு விபரத்தையும் வெளியிட வேண்டும் என பொதுஜன பெறமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் இலங்கையில் மாத்திரம் விலை எவ்வாறு அதிகரித்து செல்கிறது என கேள்வி எழுப்பினார்.

பிராந்தியத்தில் பல நாடுகள் விலையை குறைக்கும் போது இலங்கை மட்டும் விதிவிலக்காக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் திறமையின்மை, முகாமைத்துவ குளறுபடிகளுக்கான செலவை மக்கள் தலையில் சுமத்துவதாகவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்காது ஏமாற்றுவதாகவும் நாமல் குற்றம் சாட்டினார்.

மேலும் இறக்குமதி செலவு, வரிகள், வரி விலக்குகள், போக்குவரத்து செலவு, இலாப வீதம் உள்ளிட்ட எரிபொருள் விலையின் அனைத்து கூறுகளையும் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரினார்.

“எரிபொருளுக்கு மானியம் வழங்குவதாக இருப்பின், முழு செலவு விபரங்களையும் வெளியிட்டு மக்கள் பரிசோதிக்க வழி செய்ய வேண்டும்” என நாமல் வலியுறுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here