வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், மற்றொரு நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது, சந்தேகநபரின் தாயும் காயமடைந்த நிலையில் வீரகெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை சம்பவம் தொடர்பில் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here