வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இது இந்த பேரிடரில் வெளியான மிகவும் நெகிழ்சியான மீட்பு சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

சுமார் 32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். நீண்ட நேரம் சிக்கியிருந்தும் அந்த குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சுமார் 90 நிமிடங்கள் கழித்து, அதே இடத்தில் இருந்து குழந்தையின் தாயும் உயிருடன் மீட்கப்பட்டார்.

குழந்தையும் தந்தையும் உணர்வுபூர்வமாக சந்தித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து காணாமல் போயுள்ள இந்த பேரழிவுக்கு மத்தியில் இந்த சம்பவம் ஒரு அரிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் சர்வதேச மீட்புக்குழுக்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here