கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து இந்த சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் உடனடி விசாரணையை ஆரம்பித்தனர்.

விசாரணைகளை அடுத்து கல்முனைக்குடியை சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கல்முனை பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(படம் AI)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here