இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 71,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று (14) வரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 71,235 ஆக பதிவாகியுள்ளதோடு 49 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (14) ஒரே நாளில் மாத்திரம் 1,284 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுவரை மேல் மாகாணத்தில் 37,490 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு  கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 14,736 பேர் பதிவாகியுள்ளனர்.

அதேபோல் கொழும்பு மாவட்டத்தில் 14,229 டெங்கு பரவியோர் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில் ஜூலை மாதத்தின் முதல் 14 நாட்களில் மாத்திரம் 15,856 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை அதிக நோயாளிகள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதோடு அதன் எண்ணிக்கை 21,538 என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here