சிலி நாட்டில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயினால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கும்  ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார்.

மேலும் திங்கட்கிழமை 10 பேர்  தீயில் சிக்கி உயிரிழந்தனர். அத்தோடு, உயிழப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக என சிலியின் தடயவியல் மருத்துவ சேவையின் இயக்குனர் மரிசோல் பிராடோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கிட்டத்தட்ட 26,000 ஹெக்டயர் (64,000 ஏக்கர்) நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமான  செனாப்ரெட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர , சுமார் 1,400 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 1,300 இராணுவ வீரர்கள், அத்துடன் 31 தீயணைப்பு ஹெலிகப்டர்கள் மற்றும் விமானங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்தால் காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்ந்தங்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here