ஜோதிட கிரகங்களின் தலைவனாக சூரியன் பார்க்கப்படுகிறார். இவர் மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக மாறுவார்.

அந்த வகையில் இந்த மாதம் 7 முதல் அசுரர்களின் தலைவனாக பார்க்கப்படும் சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார்.

இதனால் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு வந்து சேரும் என கூறப்படுகின்றது.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்த சேர்க்கையால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த ராசியினர் யார் யார் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

  1. கன்னி ராசி
  • கன்னி ராசியில் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இடம்பெற்றுள்ளது.
  • வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பல நாள் எதிர்பார்த்திருந்த மாற்றங்களை இந்த காலப்பகுதியில் பார்க்கலாம்.
  • வழக்கத்திற்கு மாறாக சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.
  • நிகழ்வுகளில் அதிகமாக கலந்து கொள்வீர்கள். குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
  • எவ்வளவு பணம் கிடைத்தாலும் இந்த காலப்பகுதியில் சேர்த்து வைப்பது சிறந்தது.

 

  1. கடக ராசி

 

  • கடக ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • செயல்திறன்கள் அதிகரித்து நீண்ட நாள் முடிக்காமல் இருந்து வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நீண்ட நாட்கள் காத்திருந்தும் கிடைக்காத நல்ல செய்திகள், இந்த காலப்பகுதியில் கிடைக்கும்.
  • சூரியனின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிலைத்திருத்திருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும்.

 

  1. மிதுன ராசி

 

  • மிதுன ராசியில் 2 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் மிதுன ராசியினருக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீங்கள் பணிபுரிபவர்கள் என்றால் மாத சம்பளத்தில் உயர்வு ஏற்படும்.
  • நாளுக்கு நாள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  • பிறருக்கு கடன் கொடுத்து சிக்கிய பணம் இந்த நாட்களில் கைக்கு வந்து சேரும்.
  • பேச்சால் பலரை ஈர்த்து உங்கள் வேலையை சிறப்பாக முடித்து கொள்வீர்கள்.
  • வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here