மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன.
தங்கம் தேடுவதற்காக, ஏழு கிராமவாசிகள் கொண்ட ஒரு குழு மே 20 அன்று அந்தக் குகைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குகையின் நுழைவாயில் முற்றிலுமாக மூடப்பட்டு விட்ட நிலையில் இவ்வாறு சென்றவர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குகைக்குள் சென்றவரில் ஒருவர் வெளியே வந்து, சிக்கியிருந்தவர்களைப் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது அழைப்பைத் தொடர்ந்து விசேட மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சுமார் 300 மீட்டருக்கு அடியில் சிக்கியிருந்த நிலையில் நால்வர் மீட்கப்பட்டுள்ளனர்.
உள்ளே சிக்கியுள்ள மேலும் இருவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.








