350 போதை மாத்திரைகளுடன் இருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21,22 வயதுடைய மில்லபெத்த மற்றும் கமேவெல நான்காம் கட்டைப் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகளும் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 250 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் போதை மாத்திரைகளையும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








