கடந்த நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் முதுகலைப் பட்டதாரிகளுக்கு மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான நிறுவனத்தில் 2021 இல் முதுகலைப் பட்டங்களுக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1096 ஆக இருந்ததாகவும், 2022 இல் அது 889 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 570 என்றும் இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 281 எனவும்  கூறியுள்ளார்.

இதனால் பேராதனை பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பிரிவில் முதுகலைப் பட்டதாரிகளுக்கு பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 74 வீதத்தால் குறைந்துள்ளதாக வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி, பட்டதாரி படிப்புகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாதது, பிற முதுகலை பட்டப்படிப்புகளுக்கு வெளிநாடு செல்வது, நாட்டின் வரி விதிப்பு போன்ற காரணங்களால் முதுகலை நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் இந்நிலைமை முக்கியமாக நாட்டில் மனித மூலதனத்தின் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here