வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் சாஸ்திரங்களும் உள்ளன.

அதன்படி இந்து சமய சாஸ்திரத்தில் சிவப்பு கயிறு கட்டுதல் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நேர்மறை ஆற்றல்கள் பெருக வேண்டும், தெய்வங்களின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கயிறு கட்டப்படுகிறது.

ஆனால், சில ராசியினருக்கு சிவப்பு கயிறு கட்டுவது தீங்கை விளைவிக்கும்.

அதன்படி, மேஷம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசியினர் சிவப்பு கயிறு கட்டினால் நன்மை. நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆனால், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு சனி தான் அதிபதி. இந்த ராசியினர் கையிலோ அல்லது கழுத்திலோ சிவப்பு கயிறு கட்டினால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும்.

அதேபோல் ரிஷபம் மற்றும் கடக ராசியினர் மஞ்சள் நிற கயிறும் மிதுன ராசியினர் பச்சை நிற கயிறும் கட்டினால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here