நடிகர் பிரசாந்த், கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம் என்று அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று மணிநேர படமாம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் ஏற்றுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ள அவர், படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில் இருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் கோட் திரைப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவில் செப்டம்பர் 5ம் திகதி காலை 7 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாக இருப்பதாகவும் முன் கூட்டியே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here