மொனராகலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மொனராகலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றை நடத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மருந்தகத்திலிருந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபா மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here