நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவியேற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலின் போது முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








