Saturday, May 9, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வழக்கில் – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்னாள் வேட்பாளர் கைது!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்ததாவது,   குறித்த நபர் பன்னலவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய கப்பல் பிடிப்பு சம்பவம் நேற்று இடம்பெற்றது. கடற்படை...

இன்று வெளியாகும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (31.05.2025) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட...

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27.05.2025) நள்ளிரவுடன் முடிவடைகிறது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி...

தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வரவு செலவை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாளையுடன் இதற்கான கால எல்லை நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போதான செலவீனங்களை கோரியுள்ளது. மேலும் கட்சியின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் இது குறித்த சமர்ப்பனங்களை மாவட்ட...

சஜித்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை (23.05.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவு – சிதைந்து போன சஜித்…!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (23.05.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு; 3பேர் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி...

தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்...

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்து குழப்பகரமான சூழ்நிலை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்களை பெயரிட்டு ஒருவாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை அறிவுறுத்தியுள்ளது. ஒரு கட்சியினால் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறப்படாத சபைகளின் பதவி நிலைகள் அதற்கு பொறுப்பான ஆணையாளரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நடைபெற்று முடிந்த...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாணய சுழற்சியில் உறுப்பினர் ஒருவர் தெரிவு!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img