Sunday, September 27, 2026
No menu items!

நாடாளுமன்றத் தேர்தல்

உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தாத சபாநாயகர்..!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை. நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி...

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கை வெளியீடு!

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடையும் காலக்கெடுவின்படி ஒப்படைக்கப்பட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8361 வேட்பாளர்களிடமிருந்து மொத்தம் 7412 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சுயேச்சை...

175க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் நாடாளுமன்ற அமர்வில்!

175க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் இன்றைய தொடக்க நாடாளுமன்ற அமர்வில் காணப்படுவதால், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறை எம்.பி.க்களில் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதேவேளை, முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று இம்மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின்...

நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை சபாநாயகராக நியமிக்க யோசனை!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. ஜனாதிபதியின் கீழ் 3 அமைச்சுகளும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உட்பட 21 அமைச்சர்களும்...

100,000 தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தவிப்பு..!

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிட்டத்தட்ட 100,000 தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தவித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து…

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின்...

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி கட்சிகள் பெற்ற ஆசனங்கள்..!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி – 141 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 35 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி - 7 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி – 3 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2 ஆசனங்கள் ஜனநாயக தமிழ்...

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி - 106 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி - 28 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி - 3 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 1 ஆசனம் ஜனநாயக தமிழ்...

தபால் மூல வாக்களிப்பு எண்ணும் பணி மாலை 5.00 மணிக்கு ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மாலை 4.00 மணியுடன் வாக்களிக்கும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அத்துடன் கட்சிகள்...

இரண்டாயிரத்தை கடந்த தேர்தல் முறைப்பாடுகள்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 2500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 2,580 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 20 வன்முறைச் செயல்கள் மற்றும் 2,525 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img