ஒரு சில நிகழ்வுகளை வைத்து நமக்கு வரும் தீயவை மற்றும் நல்லவைகளை அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், குடும்ப அங்கத்தவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால், மன அழுத்தம், அதிக கடன், தொழிலில் பிரச்சினை போன்றவை தொடர்ந்து நடந்தால் கெட்ட அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
அதுபோல் வீட்டை சுற்றி அடிக்கடி நாய்கள் அழுவதைப் போல் சத்தம் கேட்டால் ஏதோ கெட்டது நடப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி வீட்டில் பூஞ்சைகள் இருந்தால் விரைவில் உங்கள் வாழ்வில் கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். எனவே பூஞ்சைகள் இருந்தால் உடனே அதனை சுத்தம் செய்துவிடவேண்டும்.
அதேபோல் வீட்டைச் சுற்றி வெளவால் பறக்கக்கூடாது.
வீட்டிலுள்ள கண்ணாடியாலான பொருட்கள் தொடர்ந்து உடைந்துகொண்டே இருக்கக்கூடாது. கண்ணாடி உடைதல் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படப் போவதைக் குறிக்கும்.
குழாயில் தண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தால் பணம் விரயமாகும்.
நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அடிக்கடி அதிகாலை 3 மணிக்கு முழிப்பு வந்தால் எதிர்மறை ஆற்றல் உங்களை சூழ்ந்துள்ளது.
வீட்டில் நகைகள் தொலைந்து போனால் கெட்ட அறிகுறி.
வீட்டில் வளர்க்கப்படும் துளசி செடியில் இலைகள் வாடிப் போனால் அது நிதி நெருக்கடியின் அறிகுறி.





