ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாதெனவும் மூன்று வினாக்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு முன்னர் 03 கேள்விகள் மாத்திரமே வெளிவந்திருந்தன என்பது அந்த பரீட்சை குழுக்களின் இறுதித் தீர்மானமாகும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here