கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் 20 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த முதியவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஆவார்.
விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








