வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here