கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் மகிழுந்து சாரதி மாரவில நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அவர் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு சென்ற போது, வென்னப்புவ – கொஸ்வத்த ஹல்தடுவன பகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இதன்போது அவரது மகிழுந்தில் மோதுண்டு, உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.
இதன்போது குறித்த மகிழுந்தின் சாரதியாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







